நடிகை நயன்தாரா மற்றும் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். மூக்குத்தி அம்மன் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்தாலும் கூட கடவுள் என்கிற பெயரில் நடக்கும் வியாபாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது.
இதனால் இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. படம் நல்ல லாபத்தையும் பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது அடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தையும் ஐசரி கணேஷ்தான் தயாரிக்கிறார். இயக்குனர் சுந்தர் சி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடி என்று கூறப்படுகிறது.

நயன்தாராவிற்கு அப்படி ஒரு மார்க்கெட் இல்லை என்றாலும் கூட இந்த படம் வெற்றியை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் பாதி படம் எடுக்கப்பட்ட நிலையில் அதை எடிட் செய்து ஐசரி கணேசுக்கு போட்டுக்காட்டினார் சுந்தர் சி.
அதனை பார்த்து பிரம்மித்து போய்விட்டாராம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிப்பாக இந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என்று அவர் நம்பத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.