Cinema History
இதுவரைக்கும் உலகத்துல வராத இசையில் பாட்டு வேண்டும்!.. கண்டிஷன் போட்ட கே.பாலச்சந்தர்.. ஆடிப்போன எம்.எஸ்.வி!.
Director K Balachandar: இளையராஜாவிற்கு முன்பு இசையில் பெரும் ஜாம்பவானாக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். சிவாஜி எம்.ஜி.ஆரின் துவங்கி அப்போது இருந்த பெரும் நடிகர்கள் பலருக்கும் இசையமைத்து வந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன்.
அப்படிப்பட்ட எம்.எஸ் விஸ்வநாதனுக்கு கஷ்டம் கொடுத்த இயக்குனர்களும் உண்டு. அதில் முக்கியமானவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் இந்த சம்பவத்தை எம்.எஸ் விஸ்வநாதனனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒருமுறை கே.பாலச்சந்தர் நான் ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறேன். அந்த திரைப்படத்தின் பெயரே அபூர்வ ராகங்கள் என்பதுதான்.
எனவே அபூர்வமான ஒரு ராகம் எனக்கு வேண்டும். இதுவரை சினிமாவில் முயற்சி செய்யாத ஒரு புதுவகை ராகத்தை நீங்கள் முயற்சி செய்து எனக்கு அதன் மூலமாக பாடலை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் கே.பாலச்சந்தர். இதனை தொடர்ந்து ஒரு வாரமாக புதிதாக எப்படி ஒரு இசையை உருவாக்க முடியும் இருப்பது ஏழு ஸ்வரங்கள்தான் எப்படி இசை உருவாக்கினாலும் அந்த ஏழு ஸ்வரங்களுக்குள்ளே தானே வரும் என்று மன கஷ்டத்தில் இருந்திருக்கிறார் எம்.எஸ் விஸ்வநாதன்.
இந்த நிலையில் அவரது குருநாதரான எம் பாலமுரளி கிருஷ்ணா எம்.எஸ்.விஐ பார்த்து எதற்கு இவ்வளவு கலக்கமாக இருக்கிறாய் என்று கேட்ட பொழுது விவரங்களை கூறியிருக்கிறார் எம் எஸ் வி.
அதனை கேட்ட பாலமுரளி கிருஷ்ணா ஒரு மூன்று குறிப்பிட்ட ராகங்களை கூறி இந்த மூன்று ராகங்களையும் கலந்து இதுவரை எந்த ஒரு இசையும் வந்ததே கிடையாது. எனவே அந்த ராகங்கள் மூலம் ஒரு இசையை முயற்சி செய்து கொடு.
அது ஒரு புது ராகமாக இருக்கும் என்று யோசனை கொடுத்திருக்கிறார் பிறகு யோசித்த எம்.எஸ்.விக்கு அது சரி என்று பட்டது. அதன்படி தான் அபூர்வ ராகங்கள் திரைப்படத்திற்கு அவர் இசையமைத்து கொடுத்தார். எனவே அந்த படத்திற்கு இசையமைத்ததற்கான முழு பெருமையும் அவரது குருநாதரைதான் சேரும் என்று எம் எஸ் வி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்