Cinema History
இதுக்கூட பண்ண முடியல… நீயெல்லாம் ஒரு கவிஞனா?.. எகத்தாளமாய் பேசிய எம்.எஸ்.வி.. கண்ணதாசன் செய்த சம்பவம்..!
கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த இசை கலைஞர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.வி. தமிழில் எம் எஸ் வி நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இளையராஜாவிற்கு முன்பு வரை எம்.எஸ்.வி இசைக்குதான் அதிக வரவேற்பு இருந்தது.
இதனால் திரைத்துறையில் இருக்கும் பெரும் நடிகர்களே எம்.எஸ்.வியின் இசையில் தங்களுக்கு பாடல்கள் வேண்டும் என்று நினைத்தனர். இந்த நிலையில் எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது.
கண்ணதாசனின் பழக்கம்:
கண்ணதாசனை பொருத்தவரை அவரை மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும் அவரிடம் ஒரு சில வார்த்தைகள் யாரேனும் தவறாக பேசிவிட்டால் கூட அந்த படத்திற்கு பாடல் வரிகள் எழுதாமல் சென்று விடக் கூடியவர் கண்ணதாசன்.

இப்படி இருக்கும் பொழுது எம்.எஸ்.வி அவரை மோசமாக திட்டிய சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. ஒரு பாடலுக்கான இசையை எம்.எஸ்.வி எழுதிய பிறகு அந்த பாடலில் வரும் வார்த்தைகள் லா என்ற எழுத்தில் முடிய வேண்டும் என்பது எம்.எஸ்.வியின் ஆசையாக இருந்தது..
அதை கண்ணதாசனிடம் கூறினார். அதற்கு கோபமடைந்த கண்ணதாசன் அது எப்படி லா என்று முடியும் பாடல் வரிகளையே வரிசையாக எழுத முடியும் என்று கூறி சத்தம் போட்டு உள்ளார்.
சத்தம் போட்ட எம்.எஸ்.வி:
இது எம்.எஸ்.விக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது உடனே நீ இவ்வளவு பெரிய கவிஞன் என்று கூறிக் கொள்கிறாய் இந்த மாதிரி ஒரு பாட்டை உன்னால் போட முடியாதா என்று கேட்டுவிட்டார் எம் எஸ் வி.

இது கண்ணதாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை தொடர்ந்து அவர் அப்படியான ஒரு பாடலை பிறகு எழுதி கொடுத்து விட்டார். இருந்தாலும் எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் அதற்கு பிறகு பெரிதாக சண்டைகள் ஏற்பட்டதில்லை.
அவர்கள் நண்பர்கள் என்பதால் அப்போது ஏற்படும் சண்டைகள் எல்லாம் அப்பொழுதே முடித்து விடும் இந்த விஷயத்தை எம்.எஸ்.வி. ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
