Connect with us

மக்கள் அப்படி என்னை கூப்பிடுறது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு!.. மனம் திறந்து பேசிய தேவா!.

deva

Cinema History

மக்கள் அப்படி என்னை கூப்பிடுறது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு!.. மனம் திறந்து பேசிய தேவா!.

Social Media Bar

Musician Deva : தேனிசை தென்றல் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. மெலோடி பாடல்களிலும் சரி, கானா பாடல்களிலும் சரி பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தேவா. ஆனால் எப்போதுமே கானா பாடல்களால்தான் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.

ஏனெனில் கிராமங்களில் பாமர மக்களின் வாழ்வில் கலந்திருந்த கானா இசைக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் தேவா. இப்போதும் கிராம புரங்களில் உள்ள டவுன் பஸ்களிலும், ஊர் திருவிழாக்களிலும் தேவாவின் கானா பாடல்களை கேட்க முடியும்.

அதே சமயம் தேவா நிறைய மெலோடி பாடல்களையும் இசையமைத்துள்ளார். முகவரி, நினைத்தேன் வந்தாய் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பான பல மெலோடி பாடல்களை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான அங்கீகாரம் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.

இதுக்குறித்து தேவா ஒரு பேட்டியில் கூறும்போது என்னை யாராவது பொது வெளியில் பார்க்கும்போது கூட அந்த கானா இசை போடுவாரே அவர்தான இது என கூறுகின்றனர். அது எனக்கு கொஞ்சம் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

ஆனால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, நடனமாட இன்னமும் எனது கானா இசையைதான் பயன்படுத்துகிறார்கள் எனும்போது அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார் தேவா.

To Top