Cinema History
உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இசை சொல்லி தர முடியாது!.. உதாசீனப்படுத்தின குருவிற்கு பதிலடி கொடுத்த இளையராஜா!..
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அதன் பிறகு சினிமாவில் யாருமே தொட முடியாத உயரத்தை தொட்டார் இளையராஜா. ஆனால் மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து இளையராஜா கொஞ்சம் மாறுபட்டவர் என கூறலாம்.
ஏனெனில் மற்ற இசையமைப்பாளர்கள் போல அவர் சரியான முறையில் சங்கீதத்தை கற்றுக்கொள்ளவில்லை. ஓரளவிற்குதான் அவருக்கு இசை தெரியும். இதனை அடுத்து அவருக்கு இன்னும் அதிக இசையை கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் அப்போது இசையமைப்பாளராக இருந்த தன்ராஜ் மாஸ்டர்.
எனவே அவர் அப்போது நடக்கும் இசை தேர்விற்கு இளையாராஜாவை விண்ணப்பிக்குமாறு கூறினார். மேலும் அவரே இளையராஜாவிற்கு பயிற்சியும் அளிப்பதாக கூறினார். இளையராஜாவும் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த தேர்விற்கு விண்ணப்பித்தார்.
ஆனால் தினசரி இளையராஜா பயிற்சிக்கு வருவதில் சிக்கல் இருந்தது. ஏனெனில் அப்போதே அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் தொடர்ந்து பயிற்சி எடுக்க முடியாத நிலையில் இருந்தார் இளையராஜா.
இது தன்ராஜ் மாஸ்டருக்கு கோபத்தை ஏற்ப்படுத்தியது. பொறுத்து பொறுத்து பார்த்த அவர் ஒரு கட்டத்துக்கு மேல் கோபமாகி விட்டார். நீ தொடர்ந்து இசை கற்றுக்கொள்ள வர மாட்டேன் என்கிறாய். இனி உனக்கு இசையே நான் சொல்லி தர போவதில்லை என கூறியுள்ளார்.
அப்போது அவரிடம் பேசிய இளையராஜா நான் அந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து காட்டுகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். அதே போல அந்த தேர்வை எழுதி 85 மதிப்பெண்களை பெற்றார் இளையராஜா. தன்னுடைய குருவிடம் விட்ட சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே படித்து அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றார் இளையராஜா.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்