Connect with us

பாட்ஷா படத்தில் பாட்டு நல்லா வந்ததுக்கு அந்த அஜித் இயக்குனர்தான் காரணம் – ஓப்பனாக கூறிய தேவா!..

Cinema History

பாட்ஷா படத்தில் பாட்டு நல்லா வந்ததுக்கு அந்த அஜித் இயக்குனர்தான் காரணம் – ஓப்பனாக கூறிய தேவா!..

Social Media Bar

தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசை தென்றல் என்று அன்பாக அழைக்கப்படுபவர் தேவா. தேவை இசையமைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. கிராமிய இசைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியதில் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு.

தேவா ஒருமுறை பேட்டியில் பேசும்போது தமிழ் சினிமா இயக்குனர் வசந்த் தனக்கு எப்படி உதவினார் என்பது குறித்து கூறியிருந்தார். இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவில் ஆசை மாதிரியான சில படங்களை இயக்கியுள்ளார். அப்படி சில படங்களை இயக்கும்போது அவற்றிற்கு தேவாவும் இசையமைத்துள்ளார்.

அப்போது வசந்த் தேவாவிடம் முக்கியமான சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது பாடலுக்கு இசையமைக்கும்போது எடுத்த உடனேயே நாம் சொல்ல வரும் கருத்துக்களை சொல்ல கூடாது. ஒருவர் வீட்டிற்கு வந்தால் எடுத்த உடனே என்ன வேலையாக வந்தீர்கள் என கேட்க மாட்டோம். முதலில் அவர்களை அழைத்து அமர வைப்போம். அதன் பிறகுதான் அவர்கள் வந்த செய்தியை கேட்போம்.

அதே முறையைதான் இசையிலும் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பிறகு பாட்ஷா படத்திற்கு இசையமைக்கும்போது அதை பின்பற்றியே அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார் தேவா. இதனை அவர் தனது பேட்டியில் கூறியிருந்தார்.

To Top