Tamil Cinema News
டிவி ஷோவில் இறங்கிய மிஸ்கின்.. முதல் நாளே நடந்த அட்ராசிட்டி..!
இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நிறைய படங்களில் நடிகராகவும் களமிறங்கி நடித்திருக்கிறார் மிஷ்கின்.
இது இல்லாமல் நிறைய பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் மிஷ்கின்.
மிஷ்கினை பொருத்தவரை மற்ற நடுவர்கள் போல் இல்லாமல் கண்டிப்பாக நிகழ்ச்சியை ட்ரெண்டிங்காக கொண்டு போவதற்கான அனைத்து விஷயங்களையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் பொதுவாக மேடை நிகழ்ச்சிகளுக்கு வந்தாலே மிஸ்கின் பேசும் விஷயங்கள் அதிக பிரபலம் அடையும். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் முதல் ஷோ நடந்த பொழுது மிஷ்கின் செய்த விஷயங்கள் இப்பொழுது பேசப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில் பாடல்கள் பாடும் பொழுது பின்னால் சிலர் நடனம் ஆடுவது வழக்கமாக உள்ளது. அப்படியாக நடனம் ஆடிக் கொண்டிருந்த பொழுது சிறப்பாக நடனமாடிய பெண்ணை அழைத்து அவரை பாராட்ட வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார் மிஷ்கின்.
அந்த பெண்ணுக்கு நடன பயிற்சி அளிக்க தானே செலவு செய்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார் மிஷ்கின். இந்த நிலையில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ? என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
