Cinema History
ஒரு டயலாக்தான் பேசணும்.. நாகேஷிற்கு பாலச்சந்தர் போட்ட விதிமுறை.. ஆனாலும் விசில் பறந்தது!.. அதுதான் நாகேஷ்!.
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி நாகேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் எனவே பல திரைப்படங்களில் கதாநாயகனுக்கு நண்பன் கதாபாத்திரத்தில் கூட நாகேஷ் நடித்தார்.
அதே சமயம் எவ்வளவிற்கு காமெடியாக நடிக்கிறாரோ அதே அளவு சீரியசான கதாபாத்திரத்திலும் நாகேஷால் நடிக்க முடியும் சில திரைப்படங்களில் கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரங்களிலும் அவரை பார்க்க முடியும். இந்த நிலையில் இயக்குனர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராக எப்போதுமே நாகேஷ் இருந்திருக்கிறார்.
அதற்கு காரணம் என்னவென்றால் நாகேஷின் தனிப்பட்ட நடிப்புதான் நாகேஷை வைத்து படம் இயக்கிய பிறகு கமலை வைத்து அதிக படங்களை இயக்கியிருக்கிறார் பாலச்சந்தர். ஆனால் அவர் ஒருமுறை கூறும் பொழுது நாகேஷ் அளவிற்கான நடிப்பை கமல்ஹாசனிடம் கூட நான் கண்டதில்லை என்று கூறியிருக்கிறார்.
பாலச்சந்தர் நாடக கம்பெனி நடத்தி வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்தே நாகேஷிற்கும் பாலச்சந்தருக்கும் இடையே நட்பு இருந்து வந்தது பாலச்சந்தரின் நாடகங்களை பார்த்து நாகேஷ் தனக்கு இந்த நாடகங்களில் ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அப்பொழுதே நாகேஷ் சினிமாவில் நடிக்க துவங்கியிருந்தார். எனவே பாலச்சந்தர் கூறும் பொழுது உனக்கு முக்கிய கதாபாத்திரம் வைத்து ஒரு கதையை எடுத்து தான் அதில் உன்னை நடிக்க வைக்க வேண்டும்.
இப்போது இருக்கும் கதைகள் உனக்கு சரியாக இருக்காது என்று கூறியிருக்கிறார் இருந்தாலும் நாகேஷ் விடாப்பிடியாக அடுத்த நாடகத்தில் வரும் ஒரு போஸ்ட் மேன் கதாபாத்திரத்தில் தான் நடிப்பதாக கூறினார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு போஸ்ட் வந்திருக்கிறது என்கிற ஒரே ஒரு டயலாக் தான் பேச வேண்டி இருந்தது.
எனவே பாலச்சந்தர் நாகேஷிற்கு ஒரு விதிமுறை வைத்தார் அந்த ஒரு வசனத்தை தவிர வேறு எந்த வசனமும் நாடகத்தில் பேசக்கூடாது என்று கூறி இருந்தார் எனவே நாடகத்தில் நடிக்க சென்ற நாகேஷ் அங்கு போய் தனது உடல் பாவனைகளால் நகைச்சுவை காட்டி விட்டு அதன் பிறகு சார் போஸ்ட் வந்திருக்கு என கூறியுள்ளார்.
இதை பார்த்து அந்த மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்திருக்கிறது இதை பார்த்த பாலச்சந்தர் இதற்குத்தான் உன்னை இதில் நடிக்க வைக்க மாட்டேன் என்று கூறினேன் என்று கூறியிருக்கிறார் அந்த அளவிற்கு சின்ன கதாபாத்திரமாக வந்தால் கூட மக்கள் மத்தியில் தனக்கான வரவேற்பை உருவாக்கிக் கொள்பவர் நாகேஷ்.