செத்தும் ஒரு மனுசனால் நடிக்க முடியுமா!.. நிரூபித்து காட்டிய நாகேஷ்!.. நெஜமாவா?

Actor Nagesh : தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி பல குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் நாகேஷ். நாகேஷ் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக நடிக்கதான் வந்தார். நாகேஷ் தனக்கென தனி உடல் மொழியை வைத்திருந்தார். அதுவே அவரை மற்ற காமெடி நடிகர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்ட துவங்கியது.

இதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளும் அதிகரித்தன. தொடர்ந்து பெரும் ஹீரோக்கள் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் நாகேஷ். அப்போது அவருக்குள் இருக்கும் மகா நடிகனை கண்டவர் இயக்குனர் பாலச்சந்தர்தான்.

அதனை தொடர்ந்து பாலச்சந்தர் தனது நாடகங்களில் நாகேஷிற்கு வாய்ப்புகளை கொடுத்தார். அதற்கு பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அவர் திரைப்படங்களிலும் நடித்தார். எப்போதும் பாலசந்தர் கமல்ஹாசனை விடவும் நாகேஷைதான் சிறந்த நடிகராக கூறுவாராம்.

Social Media Bar

இதனாலேயே கமல்ஹாசனுக்கு நாகேஷ் மீது அதிக மதிப்பு. தொடர்ந்து கமல்ஹாசன் அவரது திரைப்படங்களில் அதிக வாய்ப்புகளை கொடுத்து வந்தார். செத்தும் நடித்தான் சீதகாதி என்கிற ஒரு வார்த்தையை பல இடங்களில் கேட்டிருப்போம்.

அதற்கு எடுத்துக்காட்டாக நாகேஷ் நடித்த திரைப்படம்தான் மகளிர் மட்டும். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரித்தார். இதில் நாகேஷ் இறந்த மனிதராக நடித்திருப்பார். இறந்தவர்கள் என்றால் எந்த அசைவும் இல்லாமல் பிரேதமாக இருக்க வேண்டும். ஆனால் அதில் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நாகேஷ்.