Tamil Cinema News
மொத்த சுமையையும் ஆண்கள் மேல மட்டுமே போடாதீங்க ப்ளீஸ்… மனம் நொந்த நடிகை..!
நடிகை நக்ஷத்ரா நாகேஷ் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார். நிறைய குறும்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
தற்சமயம் திரைத்துறையில் வாய்ப்புகள் பற்றி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் ஆண்கள் மட்டுமே குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வது குறித்து அவர் சமீபத்தில் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது சிறு வயது முதலே எனக்கு எனது அம்மா ஒரு விஷயத்தை சொல்லி வளர்த்தார். அதாவது எனது தந்தை அண்ணன் கணவர் என்று ஆண்களின் மேல் சுமையை போட்டு நான் வாழ கூடாது.
எனக்கான சம்பாத்தியத்தை நானே சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அதை எப்பொழுது எனக்கு புரிந்தது என்றால் என்னுடைய முதல் சம்பளத்தை பெறும் பொழுதுதான்.
நான் முதல் சம்பளத்தை பெறும் பொழுது நிறைய வேலை பார்த்தேன் ஆனால் எனக்கு குறைவான சம்பளம்தான் கிடைத்தது. அப்பொழுதுதான் பணம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு கடினமான ஒரு விஷயம் என்பதை புரிந்து கொண்டேன்.
அந்த கடினமான விஷயத்தை ஒருவர் மீது மட்டும் திணிப்பது தவறு என்பதை புரிந்து கொண்டேன். இந்த வாழ்க்கை மிக அழகானது எனவே ஆண்கள் தொடர்ந்து தங்களது இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று அந்த வாழ்க்கையை இழந்து விடக்கூடாது.
அதேபோல பெண்களும் மற்ற பெண்களை பார்த்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று தங்களுக்குள் ஒரு விதிமுறைகளை போட்டுக்கொண்டு வாழ்க்கையை மோசம் ஆக்கிக் கொள்கின்றனர். இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார் நக்ஷத்ரா நாகேஷ்.
