உன்கிட்டயும் நான் அடி வாங்கணுமா!.. எந்திரிச்சி வெளியே போ!.. பாக்கியராஜால் கடுப்பான நம்பியார்!..

Bhagyaraj: பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஏனெனில் பெரும்பாலும் பாக்கியராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு பிடித்த வகையிலேயே இருக்கின்றன.

ஆரம்பத்தில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும்போது கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் பாக்கியராஜின் ஆசையாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவ்வளவு எளிதாகவெல்லாம் கதாநாயகன் ஆகிவிட முடியாது என்று.

bhagyaraj
bhagyaraj
Social Media Bar

எனவே முதலில் இயக்குனர் ஆகிவிட்டு பிறகு கதாநாயகன் ஆகலாம் என பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பாக்கியராஜை பொறுத்தவரை அப்போது கதாநாயகன் ஆவதற்கான எந்த சிறப்பம்சமும் தன்னிடம் இல்லை என அவர் நினைத்தார்.

நடிக்க மறுத்த நம்பியார்:

எனவே மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு கதாநாயகன் ஆக வேண்டும் என முடிவெடுத்த பாக்கியராஜ் அதிகப்பட்சம் இன்னசெண்டான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். அது மக்களுக்கும் பிடித்துப்போனது. இப்படி நம்பியாருக்கும் ஒரு சம்பவத்தை செய்தார்.

தூரல் நின்னு போச்சு திரைப்படத்தை இயக்கும்போது அதில் வரும் ஒரு காமெடி கதாபாத்திரத்தை நம்பியாருக்கு வழங்க வேண்டும் என ஆசைப்பட்டார் பாக்கியராஜ். இதை நம்பியாரிடம் கூறியப்போது அவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியான பெரும் ஆட்களிடம் அடி வாங்கி இருக்கிறேன்.

nambiyar
nambiyar

நான் எப்படி உன்னை மாதிரி சின்ன பசங்க கிட்ட அடிவாங்குறது என கேட்டுள்ளார். அதற்கு பாக்கியராஜ் இதில் நீங்கள் நல்லவராக நடிக்க வேண்டும் என கூறவும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மறுத்துவிட்டார் நம்பியார். இருந்தாலும் எப்படியோ பேசி அதில் அவரை நடிக்க வைத்தார் பாக்கியராஜ்.

பாக்கியராஜ் சொன்னது போலவே அந்த படத்தில் நம்பியாருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.