Cinema History
அந்த ஒரு சீன்ல மிரட்டிட்ட தம்பி!.. வடிவேலு நடிப்பை பார்த்து போன் செய்த நாசர்!.. எந்த படம் தெரியுமா?
தமிழில் உள்ள முக்கியமான நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. காமெடி நடிகர்களை பொறுத்தவரை அவர் அளவிற்கு அதிக படங்களில் நடித்த இன்னொரு நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறாரா என்பது சந்தேகமே.
முதலில் காமெடி நடிகராக அறிமுகமான வடிவேலு வெகு காலங்களாக காமெடி கதாபாத்திரமாகவே நடித்து வந்தார். பிறகுதான் காமெடி கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் 23ஆம் புலிகேசி.
இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. தற்சமயம் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு சீரியஸான கதாபாத்திரத்தையும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக நிரூபித்துள்ளார் வடிவேலு.
23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடிகர் நாசரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தை எடிட் செய்யும்போது அவரும் உடன் இருந்தார். அப்போது ஒரு போர் காட்சியில் வில்லன் வருவதால் பயந்துப்போன வடிவேலு அங்கு இருக்கும் சாவி துவாரத்தை சுற்றி விளையாடி கொண்டிருப்பார்.
அந்த காட்சியை பார்த்துவிட்டு வடிவேலுவிற்கு போன் செய்தார் நாசர். அந்த காட்சி சிறப்பாக உள்ளது தம்பி. சார்லி சாப்ளினுக்கு பிறகு அப்படி ஒரு உடல் மொழியை உங்களிடம் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார். அதை கேட்டதும் அடுத்த சில நிமிடங்களில் நேரிலேயே வந்துவிட்டார் வடிவேலு.
ஏனெனில் நாசர் மாதிரியான பெரும் நடிகர்கள் நடிப்புக்காக வடிவேலுவை புகழ்வது எவ்வளவு பெரிய பெருமை. இந்த நிகழ்வை நாசர் ஒரு நேர்க்காணலில் கூறியிருந்தார். மேலும் கமல் எப்போதும் வடிவேலுவின் நடிப்பை புகழ்ந்து பேசுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.