குட் பேட் அக்லியில் கமிட்டான நயன்தாரா.. சம்பளத்துக்கே பாதி காசு போயிடும் போலயே!..

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்பட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் மட்டுமே இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். அல்லது நயன்தாராவே முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் திரைப்படத்தில் அவர் நடிப்பார்.

சமீபத்தில் அன்னப்பூரணி என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. ஆனால் இந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. இருந்தாலும் நயன்தாரா அவரது சம்பளத்தை குறைக்காமலே இருந்து வருகிறார்.

Nayanthara
Nayanthara
Social Media Bar

ஆனால் நயன்தாராவை விட த்ரிஷா குறைவான அளவில் சம்பளம் வாங்குவதால் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்திலும் த்ரிஷாதான் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு நயன்தாராவிற்கு சம்பளமாக 10 கோடி கொடுத்துள்ளனராம். இயக்குனருக்கு 15 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே நயன்தாரா அஜித் சேர்ந்து நடித்து ஏகன், பில்லா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன.