Connect with us

மலையாள நடிகையின் வாய்ப்பை தட்டி தூக்கிய நயன்தாரா.. ராக்காயி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Tamil Cinema News

மலையாள நடிகையின் வாய்ப்பை தட்டி தூக்கிய நயன்தாரா.. ராக்காயி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Social Media Bar

Actress Nayanthara is one of the most prominent leading actresses currently popular in Tamil cinema. The trailer of her upcoming film Raakaai was recently released. There is a rumor that another actress was supposed to play the role in this film.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளிலேயே அதிக வருமானம் பெரும் ஒரு நடிகையாக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். பெரும்பாலும் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் கோடிகளில் அதிக சம்பளம் பெற்று தங்களுக்கு என்று தனி இடத்தை பிடிப்பது என்பது கடினமான விஷயமாகும்.

ஆனால் நயன்தாராவை பொருத்தவரை தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று தொடர்ந்து முன்னெடுத்து மக்கள் மத்தியில் அதை நிரூபித்தும் காட்டி இருக்கிறார். அதனை தொடர்ந்து இப்பொழுது நயன்தாராவிற்கு அதிக வரவேற்புகள் சினிமாவில் இருந்து வருகின்றன.

தொடர்ந்து கதாநாயகியை மையமாக வைத்து இருக்கும் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் நயன்தாரா. அதன் மூலமாக தனக்கென ஒரு தனி ரசிக்கப்பட்டாலத்தை உருவாக்குவதற்கான வேளையில் நயன்தாரா இறங்கியிருக்கிறார்.

nayanthara

nayanthara

நயன்தாரா புது படம்:

அந்த வகையில் இதற்கு முன்பு நடித்த திரைப்படங்கள் எல்லாம் தாண்டி அதிக ஆக்‌ஷனில் இப்பொழுது ராக்காயி என்கிற ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் நயன்தாரா சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த திரைப்படத்தை இயக்குனர் செந்தில் நலசாமி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு முன்பு நடிக்க இருந்தது நடிகை மஞ்சு வாரியார் என்று கூறப்படுகிறது.

இந்த கதாபாத்திரம் இவருக்கு சிறப்பாக பொருந்தும். ஏனெனில் வேட்டையன் திரைப்படத்தில் அவருக்கு ஒரு மாஸ் காட்சி வைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியே மிக சிறப்பாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் பிறகு மஞ்சுவாரியரை விட நயன்தாரா படத்தில் நடித்தால் அதிக விளம்பரம் கிடைக்கும் என்று கூறி கதாநாயகியை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top