Connect with us

நீங்க பண்ணுனது மட்டும் நியாயமா?. தனுஷை குற்றம் சாட்டிய நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!

dhanush nayanthara

Tamil Cinema News

நீங்க பண்ணுனது மட்டும் நியாயமா?. தனுஷை குற்றம் சாட்டிய நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!

Social Media Bar

Nayanthara and Dhanush have been leading celebrities in Tamil cinema for years. Currently there is a problem between these two

தற்சமயம் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது.

அப்பொழுதாவது திருமண வீடியோவை மொத்தமாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்திருந்தனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி. ஆனால் அந்த வீடியோவில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் காட்சிகளும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

நானும் ரவுடிதான் திரைப்படத்தை தயாரித்தது நடிகர் தனுஷ்தான் எனவே அவரிடம் ஒப்புதல் வாங்காமலேயே அந்த காட்சிகளை வைத்திருக்கின்றனர். இரண்டு வருடமாக தனுஷிடம் ஒப்புதல் கேட்டோம். அவர்கள் ஒப்புதல் வழங்கவில்லை.

நயன்தாரா தனுஷ் பிரச்சனை:

இந்த நிலையில் இதற்கு எதிராக தனுஷ் வழக்கு தொடர்ந்த நிலையில் நயன்தாரா அதற்கு பதிலடி கொடுக்கும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதுதான் இப்பொழுது பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு நடுவே தயாரிப்பாளர் எஸ்.எஸ் குமரன் தற்சமயம் நயன்தாராவிற்கு எதிராக இன்னொரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது மூன்று வினாடி காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததற்கு கொதித்து எழுந்த நீங்கள் கடந்த ஆண்டு எல்ஐசி என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

தயாரிப்பாளர் போட்ட போடு:

எல்.ஐ.சி என்கிற தலைப்பு என்னுடைய நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்தும் விக்னேஷ் சிவன். அந்த தலைப்பை பயன்படுத்தி விளம்பர படுத்தியது எந்த வகையில் நியாயம் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இப்பொழுது அந்த திரைப்படத்தின் பெயரை எல்.ஐ.கே என்று மாற்றி இருந்தால் கூட எல்.ஐ.சி என்கிற பெயர் ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்டு விட்டது இதனால் அந்த தயாரிப்பாளர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார் எனவே இதுகுறித்து நியாயம் கேட்டு அவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

 

To Top