தமிழ் சினிமாவில் ஐயா, சந்திரமுகி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக பிரபலமாகி வெகு சீக்கிரத்திலேயே பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நயன்தாரா.
ஆரம்பத்திலேயே இவருக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சீக்கிரத்திலேயே அதிக பிரபலம் ஆகிவிட்டார். அதற்குப் பிறகு அண்ணாத்த, தர்பார் என்று இன்னும் நிறைய திரைப்படங்களில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நயன்தாரா.
ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் நடித்த பொழுது அதிகமாகவே கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். தமிழ், மலையாளம் என்று பல மொழிகளிலும் அவர் கவர்ச்சி காட்டி நடித்திருப்பதை பார்க்க முடியும் ஏனெனில் அப்பொழுதெல்லாம் நடிகைகள் கவர்ச்சி காட்டினால்தான் மார்க்கெட் இருக்கும் என்கிற நிலைமை இருந்து வந்தது.
இந்த நிலையில் நயன்தாரா குறித்து சுவாரஸ்யமான சம்பவத்தை பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். நயன் தாராவிற்கு கஜினி திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. கஜினி திரைப்படத்தில் முதலில் நடிகை ஸ்ரேயா நடிப்பதாக இருந்தது.
ஆனால் அதிகம் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் அதில் நடிப்ப நடிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த நயன்தாரா ஏ.ஆர் முருகதாஸ் சொன்னதை விடவும் மிக குறைவான ஆடையை அணிந்து நடிப்பதற்கு வந்திருந்தார்.
அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏ.ஆர் முருகதாஸ் இந்த அளவுக்கு குறைவாக ஆடை அணிய தேவை இல்லை என்று கூறியிருக்கிறார் அதற்கு பதில் அளித்த நயன்தாரா கொஞ்சமாவது கவர்ச்சி காட்டி நடித்தால் தான் மக்களுக்கு பிடிக்கும் என்று பதில் அளித்தாராம்.







