நஸ்ரியா நடிச்ச படத்தை பார்த்து கொலை குற்றத்தில் இறங்கிய வாலிபர்.. சூக்ஷிம தர்ஷினி திரைப்பட விமர்சனம்.!
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து பலரும் படு தோல்வி அடைந்து வருகின்றனர். ஆனால் மக்களுக்கு பிடித்த வகையிலான படங்களை தருவதற்கு பெரிய பட்ஜெட் தேவையில்லை. நல்ல கதைகள் இருந்தால் போதும் என்று மலையாள சினிமாவில் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
அப்படியாக சமீபத்தில் வந்து அதிக பிரபலமடைந்த திரைப்படம்தான் சூக்ஷமதர்ஷினி. இந்த திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை இயக்குனர் ஜித்தின் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 55 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஹாட்ஸ்டார் ஓ.டி.டியில் வெளியான இந்த திரைப்படம் தற்சமயம் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.
படத்தின் கதைப்படி நஸ்ரியா வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் பேசில் ஜோசப் வந்து குடியேறுகிறார். அவர் ஏற்கனவே அந்த தெருவில் இருந்தவர்தான். வெகு வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார். ஆனால் அவரிடம் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை நஸ்ரியா பார்க்கிறார்.
பேசில் ஜோசப்பின் தாயார் மறதி வியாதி கொண்டவர் என கூறப்படுகிறது. ஆனால் அவர் மிக தெளிவாக இருக்கிறார். இதற்கு நடுவே ஒருநாள் அந்த தாயார் காணாமல் போகிறார். மறுநாள் அவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து விட்டதாக செய்திகள் வருகின்றன.
இதனை தொடர்ந்து இந்த இறப்புக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை நஸ்ரியா எப்படி கண்டறிய போகிறார் என்பதை வைத்து கதை செல்கிறது. மிகவும் விறு விறுப்பான திரைப்படமாக இது இருந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு நபர் தனது மனைவியை கொலை செய்து குக்கரில் வேக வைத்த செய்தியை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருப்போம். அந்த கொலைக்காரர் இந்த திரைப்படத்தை பார்த்தே அவருக்கு அந்த எண்ணம் வந்ததாக தெரிவித்திருக்கிறார்.