4 கோடி கடன்.. நடுத்தெருவுக்கு வந்த நடிகை நீலிமா ராணி.. ஒரே படத்தால் நடந்த சம்பவம்.!
சீரியல்களில் நடிப்பதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற்று உதவி கதாபாத்திரங்களில் நிறைய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி.
மொழி, நான் மகான் அல்ல மாதிரியான சில திரைப்படங்களில் கவனத்தை ஈர்க்கும் ஒரு கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்களில் வெகு சிலர்தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர்.
அப்படியாக பிரபலமடைந்த வெகு சிலர்களில் நீலிமா ராணியும் ஒருவராக இருக்கிறார். நீலிமா ராணியை பொறுத்தவரை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் கூட இப்பொழுதும் வயது என்பதே தெரியாத அளவிற்கு இளமையாகவே இருந்து வருகிறார்.
அவ்வப்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டும் இருக்கிறார். இந்த நிலையில் நீலிமா ராணி படம் தயாரித்தது குறித்து சமீபத்தில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது கையில் வைத்திருந்த காசை எல்லாம் வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்தேன்.
அந்த காசும் பத்தாமல் போக நான்கு கோடி ரூபாய் கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து முடித்தேன் ஆனால் வெளியான அந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை.
மிகப்பெரும் தோல்வியை அடைந்தது அதனை தொடர்ந்து எங்கள் குடும்பமே தெருவுக்கு வந்தது என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் நீலிமா ராணி. அதற்கு பிறகு நீலிமா ராணி திரைப்படங்களே தயாரிக்கவில்லை. திரைப்படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொண்டு இருக்கிறார்.