மனசுல இருக்குறதை தெரிஞ்சு மாஸ் காட்டுவார் தலைவர்!.. ரஜினிகாந்த் பேசியதை கேட்டு ஆடி போன கோபிநாத்!..

Rajinikanth neeya naana gopinath : ரஜினிகாந்த் எளிமையின் வடிவம் என்று திரைத்துறையில் பலரும் கூறுவது உண்டு. ரொம்ப சாதாரணமான ஒரு மனிதராகத்தான் எப்போதும் இருப்பார். ஒரு பெரும் கதாநாயகனுக்கு உள்ள எந்த ஒரு பகட்டும் ரஜினிகாந்திடம் இருக்காது என்று பலரும் கூறுவர்.

இந்த நிலையில் ரஜினியுடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நீயா நானா கோபிநாத் ஒரு பேட்டியில் கூடியிருக்கிறார். ஒருமுறை அவர் ரஜினியை நேரில் சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அது பலருக்கும் பெரிய விஷயமாக அமைகிறது.

எனவே கோபிநாத் ரஜினியை சந்தித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார் அவரை குறித்து பேசிய ரஜினி உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறைய நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் சிறப்பாக பேசுகிறீர்கள் என்றெல்லாம் கோபிநாத்தை பாராட்டி வந்தார்.

rajinikanth
rajinikanth
Social Media Bar

இதற்கு நடுவே ரஜினியுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கோபிநாத்தின் ஆசையாக இருந்தது. ஆனால் அதை எப்படி ரஜினியிடம் கேட்பது என்று குழப்பத்தில் இருந்தார் கோபிநாத். இந்த நிலையில் அங்கிருந்த ஒரு நபரை அழைத்த ரஜினிகாந்த் என்னை கோபிநாத்துடன் சேர்த்து ஒரு போட்டோ எடுத்து தர முடியுமா என்று கேட்டு கோபிநாத்தின் போனை வாங்கி அவரிடம் கொடுத்துள்ளார் ரஜினி.

அவரும் இவர்கள் இருவரையும் நிற்க வைத்து போட்டோ எடுத்து கொடுத்துள்ளார். அவ்வளவு பெரிய மனிதர் என்னுடன் நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறி எனக்காக என்னுடைய ஃபோனிலேயே போட்டோ எடுத்து கொடுக்கிறாரே என்று அப்போது வியந்துள்ளார் கோபிநாத் இதை அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.