Connect with us

ஒரு படம் ஹிட்டுக்கே இந்த லெவலா!.. லோகேஷை மிஞ்சிய இயக்குனர் நெல்சன் சம்பளம்!..

lokesh kanagaraj h vinoth

Cinema History

ஒரு படம் ஹிட்டுக்கே இந்த லெவலா!.. லோகேஷை மிஞ்சிய இயக்குனர் நெல்சன் சம்பளம்!..

Social Media Bar

முன்பு போல் அல்லாமல் தற்சமயம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கான வாய்ப்பு என்பது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு இயக்குனர் இன்னொரு இயக்குனரிடம் பல காலங்கள் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு பல படங்கள் இயக்கி ஹிட் கொடுத்தப்பிறகுதான் பெரும் கதாநாயகர்களை வைத்து படம் இயக்க முடியும்.

ஆனால் இப்போதெல்லாம் ஒரிரு திரைப்படங்கள் இயக்கினாலே பெரும் ஹீரோவை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அப்படியாக இயக்குனர் நெல்சனும் தனது மூன்றாவது படத்திலேயே நடிகர் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கும் அளவில் உயர்ந்தார்.

அதற்கு முன் அவர் இயக்கிய டாக்டர், கோலமாவு கோகிலா இரு படங்களின் வெற்றியின் காரணமாக பீஸ்ட் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார் நெல்சன். ஆனால் பீஸ்ட் பெரும் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் அதற்கு பிறகு ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கினார்.

ஜெயிலர் திரைப்படத்திற்கு இவர் 22 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் அடுத்து நெல்சன் இயக்கும் படத்திற்கு அவருக்கு 55 கோடி ரூபாய் சம்பளமாக தர தயாராக இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தற்சமயம் லியோ படத்திற்கே லோகேஷ் கனகராஜ் 25 கோடிதான் சம்பளமாக வாங்கி கொண்டிருக்கும் நிலையில் நெல்சனின் சம்பளம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

To Top