Tamil Cinema News
பாலச்சந்தர் இல்லாத குறையை தீர்த்த ரஜினிகாந்த்.. கமலுக்கும் ரஜினிக்கும் இப்படி ஒரு கமிட்மெண்ட் இருக்கா?
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து போட்டி நடிகர்களாக இருந்தாலும் கூட இன்னமும் நண்பர்களாக இருந்து வருகின்றனர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்.
கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்கள் என்றால் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் நடிகர் ரஜினிகாந்தை கூறலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருக்கிறார் கமல்ஹாசன். தற்சமயம் தேர்தலில் நிற்கப்போவது குறித்து அவர் ரஜினிகாந்திடம் பேசி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
முன்பெல்லாம் இந்த மாதிரியான முக்கியமான விஷயங்கள் நடக்கும் பொழுது நடிகர் கமல்ஹாசன் இதற்காக இயக்குனர் பாலச்சந்தரை நேரில் சென்று சந்திப்பாராம்.
பிறகு பாலச்சந்தரிடம் இதுக்குறித்து ஆலோசனை செய்வாராம் ஆனால் இப்பொழுது பாலச்சந்தர் இல்லாத நிலையில் ரஜினிகாந்திடம் தான் எந்த முக்கிய நிகழ்வுகள் நடந்தாலும் சென்று பேசி வருகிறாராம் கமல்ஹாசன்.
எனவே இப்பொழுது பாலச்சந்தர் இல்லாத குறையை ரஜினிகாந்துதான் தீர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது மேலும் இத்தனை வருட போட்டிக்குப் பிறகும் இன்னமும் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
