நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு வடிவேலு இல்ல.. கிடப்பில் கிடக்கும் வடிவேலு படம்.!
சினிமாவிற்கு வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்தது முதலே அவரது திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை.
அவர் நடித்த திரைப்படத்திலேயே மாமன்னன் திரைப்படம் மட்டும் தான் ஓரளவு பேசப்படும் திரைப்படமாக இருந்தது. காமெடி திரைப்படங்களில் பெரிதாக இப்பொழுதும் வடிவேலு காமெடிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே கூற வேண்டும்.
சுந்தர் சி நடித்த திரைப்படத்தில் கூட வடிவேலுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. ஆனாலும் அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை இந்த நிலையில் வடிவேலு மற்றும் பகத்ஃபாசில் இணைந்து நடித்த மாரிசன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி கூறும்போது வடிவேலு மற்றும் பகத்ஃபாசில் இணைந்து நடிப்பது மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் எனக்கு ஆச்சரியமாக இல்லை.
ஏனெனில் இந்த திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆர்.பி சௌத்ரி தான் இந்த திரைப்படத்தை தயாரித்தார் ஆனால் அந்த படம் விற்பனை ஆகாமல் கிடப்பில் கிடந்தது.
இப்பொழுதுதான் அந்த படம் விற்பனை ஆகி உள்ளது. உண்மையில் வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக மார்க்கெட் இல்லை அதனால் தான் அவர் படங்கள் விற்பனையாவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் பிஸ்மி.