Latest News
படம் ஒன்னும் அவ்வளவு மோசம் இல்லை!.. ஒரு நொடி திரைப்பட விமர்சனம்!.
முதல் படமே வரவேற்பை பெறும் வகையில் அமைவது என்பது அனைத்து இயக்குனர்களுக்கும் நடக்க கூடிய விஷயமல்ல. அந்த வகையில் இயக்குனர் பி.மணிவர்மன் இயக்கத்தில் வெளியான ஒரு நொடி திரைப்படம் கொஞ்சம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது என கூறலாம்.
தமன் குமார் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் வழக்கமாக வரும் க்ரைம் த்ரில்லர் கான்செப்ட்டில் எடுக்கப்பட்ட மற்றொரு திரைப்படம்தான் ஒரு நொடி. ஆனால் கதையம்சத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் கதை:
படத்தின் கதைப்படி கதாநாயகன் ஒரு நேர்மையான போலீஸாக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நாள் போலீஸை தேடி ஒரு பெண் வருகிறார். அவர் தனது கணவரை காணவில்லை என கூறுகிறார். எப்போது காணாமல் போனார் என கேட்கின்றனர் போலீசார்.
அதற்கு அந்த அம்மா காலையில் வெளியில் சென்றவர் காணவில்லை என்றதும் போலீஸார் சிரிக்கின்றனர். காலையில் சென்றவர் இன்னமும் வரவில்லை என்றா அவரை காணவில்லை என்கிறீர்கள். அவரே வந்துவிடுவார் என சமாதானப்படுத்துகின்றனர் போலீஸார்.
இல்லை என் கணவனுக்கு ஏதோ ஆகியிருக்கிறது எனக்கு ஒருவர் மீது சந்தேகமாக உள்ளது என அந்த பெண் கூறவும் ஹீரோ அந்த வழக்கை கையில் எடுக்கிறார். ஒரு நபர் காணவில்லை என தேட துவங்கும்போது அதன் வழியாக பல பெரிய விஷயங்களை கண்டறிகிறார் கதாநாயகன்.
அதை வைத்து கதை செல்கிறது. படம் முழுக்க சுவாரஸ்யம் குறையாமல் படம் செல்கிறது. தமிழில் குறைந்த பட்ஜெட்டில் வந்து வெற்றி கொடுத்த படங்கள் வரிசையில் இந்த படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்