Tamil Cinema News
அந்த படம் பண்ணியும் கூட வரவேற்பு கிடைக்கல.. மனம் நொந்த இயக்குனர் பாண்டிராஜ்..!
தமிழில் குடும்ப திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் பாண்டியராஜ் முக்கியமானவர். பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.
அதற்கு பிறகு அவருக்கு தமிழில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது அவரது இயக்கத்தில் வந்த கடை குட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாண்டிராஜ் பேசியிருந்தார். அப்பொழுது அவரிடம் ஏன் எப்பொழுதுமே குடும்ப படமாக எடுக்கிறீர்கள் வேறு ஏதாவது திரைப்படங்கள் எடுக்கலாமே என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பாண்டிராஜ் கதகளி திரைப்படம் நான் இயக்கிய திரைப்படம்தான்.
அது பெரும்பாலும் பலருக்கும் தெரியாது. யாராவது என்னை குடும்ப இயக்குனர் என்று கூறினால் அப்பொழுது விவரம் தெரிந்த ஒரு சிலர் மட்டும் கதகளி இவருடைய திரைப்படம் தான் என்று கூறுவார்கள். ஒருவேளை அந்த திரைப்படம் மூலமாக எனக்கு ஒரு நல்ல மதிப்பு கிடைத்திருந்தால் அதே மாதிரியான படங்களை செய்திருப்பேன்.
ஆனால் இப்பொழுது வரை குடும்ப பட இயக்குனராக தான் என்னை பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்களும் அந்த மாதிரியான கதையை நான் சொல்லும் பொழுது தான் நம்பி படத்தை தயாரிக்கிறார்கள் எனவேதான் திரும்பவும் குடும்ப திரைப்படங்களை இயக்கி வருகிறேன் என்று கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.
