Connect with us

பாக்கியராஜை விட்டு பிரிந்த பிறகு அவருக்காக நான் செய்த விஷயம்!.. யாருமே இதுவரை செஞ்சது கிடையாது!.. ரகசியத்தை உடைத்த பார்த்திபன்!.

bhagyaraj parthiban

Cinema History

பாக்கியராஜை விட்டு பிரிந்த பிறகு அவருக்காக நான் செய்த விஷயம்!.. யாருமே இதுவரை செஞ்சது கிடையாது!.. ரகசியத்தை உடைத்த பார்த்திபன்!.

Social Media Bar

Parthiban and bakhyaraj: தமிழ் சினிமாவில் அதிக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பாக்கியராஜ் அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக வந்த பலருக்கும் வாய்ப்புகளை அளித்திருக்கிறார்.

ஏனெனில் பாக்கியராஜே முதலில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகதான் பணிபுரிந்து வந்தார். அதற்கு பிறகு தனியாக படம் எடுக்க துவங்கிய பாக்கியராஜ் பிறகு அவரே கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

எனவே பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேரும் நபர்களும் கிட்டத்தட்ட பாக்யராஜின் வித்தையையே கையாண்டனர். முதலில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து விட்டு அதன் பிறகு அவரை விட்டு பிரிந்து சென்று திரைப்படங்களை இயக்குவார்கள்.

பிறகு அவர்களே தங்கள் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கியிருந்தார்கள் இயக்குனர் பாண்டியராஜ், பார்த்திபன், லிவிங் ஸ்டண் போன்ற அனைவருமே இப்படி பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு இயக்குனராகி நடிகர்கள் ஆனவர்கள் தான்.

பாக்கியராஜின் பிறந்தநாள்:

ஒவ்வொரு முறை பாக்யராஜின் பிறந்தநாள் வரும் பொழுதும் எக்கச்சக்கமான கூட்டம் அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக காத்திருக்கும். அப்படி வரும் ஒவ்வொரு நபருடனும் சேர்ந்து பாக்யராஜ் போட்டோ எடுத்துக் கொள்வார்.

அப்பொழுது அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை பார்த்திபன்தான் செய்து வந்தார். பிறகு பார்த்திபன் தனியாக படம் இயக்க துவங்கிய பிறகு பாக்யராஜ் வேறு ஒரு நபரை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார். இந்த நிலையில் அதற்குப் பிறகு பாக்யராஜின் பிறந்தநாள் வந்த பொழுது அவருக்கு அருகில் பார்த்திபனால் நிற்க முடியவில்லை.

parthiban
parthiban

இது அவருக்கு மன கஷ்டமாக இருந்தது. இதனால்  செய்தித்தாளில் பாக்கியராஜ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டார் பார்த்திபன். இதனை ஒரு பேட்டியில் கூறிய பார்த்திபன் தமிழ் சினிமாவில் எந்த உதவி இயக்குனரும் ஒரு இயக்குனருக்கு இப்படி வாழ்த்து சொல்லி இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

To Top