நடிகர் பார்த்திபன் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார். பல வருடங்களாகவே அவர் சினிமாவில் இருந்து வந்தாலும் அவருக்கு இப்பொழுது ஒரு பெரிய வரவேற்பு என்பது கிடைக்கவே இல்லை.
முக்கியமாக பார்த்திபன் தொடர்ந்து கமல்ஹாசன் போலவே தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரை கதைகளை படமாக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர். அவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் உலக சினிமா மாதிரியான தரத்தில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.

பார்த்திபன் கூறிய தகவல்:
இந்த நிலையில் எப்பொழுதுமே பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க முடியாதது ஒரு குறையாக பார்த்திபன் கூறிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் ரஜினியுடன் தனக்கு இருந்த உறவு குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும் போது அடிக்கடி நானும் ரஜினியும் சந்தித்து கொள்வோம் அப்பொழுதெல்லாம் ரஜினி உங்களது இயக்கத்தில் நீங்களும் நானும் சேர்ந்து நடிக்கும் படம் ஒன்று பண்ண வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பார். ஒருநாள் நான் நடித்த குடைக்குள் மழை திரைப்படத்தை அவரும் வந்து பார்த்தார்.
அதற்குப் பிறகு நாம் இருவரும் சேர்ந்து மட்டும் நடிக்க கூடாது. நீங்கள் என்ன இந்த மாதிரி நடிக்கிறீர்கள் என்று என்னிடம் கூறினார் என்று அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் பார்த்திபன்.







