Connect with us

மண முறிவுக்கு பிறகு அதை செய்யலை.. என் புள்ளைங்க புரிஞ்சிக்கிட்டாங்க.. வெளிப்படையாக கூறிய நடிகர் பார்த்திபன்.!

seetha parthiban

Tamil Cinema News

மண முறிவுக்கு பிறகு அதை செய்யலை.. என் புள்ளைங்க புரிஞ்சிக்கிட்டாங்க.. வெளிப்படையாக கூறிய நடிகர் பார்த்திபன்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் இயக்குனர் பார்த்திபன். பெரும்பாலும் பார்த்திபன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளங்களை கொண்டதாக இருக்கின்றன.

இந்த நிலையில் பார்த்திபனின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்தார். பல வித எதிர்ப்புகளுக்கு நடுவேதான் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஏனெனில் சீதாவை திருமணம் செய்யும்போது அவர் பிரபலமானவராக இருக்கவில்லை.

ஆனால் திருமணமாகி 12 வருடங்களிலேயே அவர்கள் இருவரும் பிறந்துவிட்டனர். பார்த்திபனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் இதுக்குறித்து பார்த்திபன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

parthiban nayanthara

parthiban nayanthara

அதில் பேசிய பார்த்திபன் கூறும்போது என் பிள்ளைகளுக்கு என்னையும் பிடிக்கும் என் மனைவியையும் பிடிக்கும். எப்போதும் எங்கள் விவாகரத்து குறித்து அவர்கள் என்னிடம் பேசியதே இல்லை. எப்போதெல்லாம அவர்களுக்கு நான் தேவையாக இருந்ததோ அப்போதெல்லாம் நான் அவர்கள் அருகில் இருந்தேன்.

பெரும்பாலும் விவாகரத்து செய்யும் மனைவிகள் தங்கள் கணவரை குறித்து குழந்தைகளிடம் வெறுப்பை ஏற்படுத்துவார்கள். அதையேதான் கணவர்களும் செய்வார்கள். ஆனால் நாங்கள் இருவருமே அதை செய்யவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு எங்கள் பிள்ளைகள் நிலைமையை புரிந்துக்கொண்டனர்.

நாங்கள் பிரிந்தது சரிதான் என அவர்கள் நினைத்தனர். ஏனெனில் திருமணம் செய்து மூன்று வருடங்களிலேயே அவர்கள் நிறைய பட்டுவிட்டனர். ஆனால் நாங்கள் 12 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளோம். அது இப்போது என் பிள்ளைகளுக்கு பெரிய விஷயமாக இருக்கிறது என பேசியிருந்தார் பார்த்திபன்.

To Top