மதத்தை புண்படுத்திட்டீங்க- சர்ச்சையான ஷாருக்கான் பாடல்?

பாலிவுட் திரையுலகில் மிக பிரபலமான நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் ஷாருக்கான். மும்பையில் உள்ள பெரும் தொழிலதிபர்களில் இவரும் ஒருவர்.

Social Media Bar

பொதுவாகவே பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்துவிடும். அதே போல தற்சமயம் ஷாருக்கான் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் பதான்.

இந்த படத்திற்கு பாலிவுட் சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். வருகிற ஜனவரி 25 அன்று இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பேஷரம் என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த பாடலில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இடம் பெற்றுள்ளார் நடிகை தீபிகா படுகோன். தற்சமயம் யூ ட்யூப்பில் இந்த பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் இந்த பாடலில் தீபிகா படுகோன் ஒரு காட்சியில் காவி நிற ஆடையில் வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர் இந்து மதத்தின் புனித நிறமான காவி நிற ஆடையணிந்து இந்து மதத்தை புண்படுத்தியுள்ளார் என்று பாடலின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.