Connect with us

உயிரோட இருக்கும்போதே மாலை போட்டுட்டாய்ங்களே!. கேரள மக்களால் அதிர்ச்சிக்குள்ளான எம்.ஜி.ஆர்!.

MGR

Cinema History

உயிரோட இருக்கும்போதே மாலை போட்டுட்டாய்ங்களே!. கேரள மக்களால் அதிர்ச்சிக்குள்ளான எம்.ஜி.ஆர்!.

Social Media Bar

Purathi thalaivar MGR: தமிழில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஆரம்பம் முதலே அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே எம்.ஜி.ஆருக்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல நல்ல கருத்துக்களை கூறும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார் எம்.ஜி.ஆர். பிறகு எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவதற்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவதற்கும் இவை அதிக உதவியாக இருந்தன.

mgr
mgr

இந்த நிலையில் தமிழில் மட்டுமன்றி வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் எம்.ஜி.ஆர். பொதுவாகவே கேரளாவில் கிருஸ்துவர்கள் அதிகம் என்பதால் அங்கு யேசுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க நினைத்தனர். அதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்தது.

ஆனால் சில காரணங்களால் அந்த படம் முழுமையாக எடுக்கப்படவில்லை. இதற்கு நடுவே சில காலங்கள் கழித்து படகோட்டி திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர் கேரளாவிற்கு வந்திருந்தார். அப்போது அவர் யேசு கெட்டப்பில் இருந்த புகைப்படத்திற்கு மாலையிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி பலரும் வணங்கி வந்தனர்.

இது என்னடா கூத்து என அதிர்ச்சியாக பார்த்துள்ளார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை அப்போது யேசுவாக போட்டோ எடுத்த போட்டோக்கிராபர் பிறகு அந்த போட்டோவை ஒரு காலண்டர் கம்பெனிக்கு விற்றுவிட்டார் என பிறகுதான் தெரிந்தது.

இதனை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அடப்பாவிகளா உயிரோட இருக்கும்போதே எனக்கு மாலை போட்டுட்டீங்களே என சிரித்துள்ளார்.

To Top