Connect with us

இப்படி பண்றதும் சிசுக்கொலைதான்!.. இப்ப நிறைய நடக்குது!.. பெற்றோர்களை வச்சி செய்யும் இயக்குனர் பேரரசு!.

perarasu

News

இப்படி பண்றதும் சிசுக்கொலைதான்!.. இப்ப நிறைய நடக்குது!.. பெற்றோர்களை வச்சி செய்யும் இயக்குனர் பேரரசு!.

Social Media Bar

சினிமாவில் ஒரு இயக்குனருக்கு முதல் படமே பெரிய நடிகர்களோடு கிடைப்பது எல்லாம் பெரிய விஷயமாகும். தமிழில் அப்படியாக எடுத்த உடனேயே முதல் படத்திலேயே விஜய்யை வைத்து திருப்பாச்சி என்னும் ஹிட் படத்தை கொடுத்து அறிமுகமானவர் இயக்குனர் பேரரசு.

அதற்கு பிறகு தொடர்ந்து தருமப்புரி, சிவகாசி என வரிசையாக நிறைய ஹிட் படங்களை கொடுத்தார். அது முதல் ஊர் பேரை படத்தின் பெயராக வைத்து படமாக்குவது என்பது பேரரசுவின் ஸ்டைலாக மாறியது. வேறு இயக்குனர்கள் யாராவது ஊர் பெயரில் படம் எடுத்தால் கூட அது பேரரசு படமாகதான் இருக்கும் என்று மக்கள் கருதினர்.

ஆனால் திருப்பதி, பழனி மாதிரியான திரைப்படங்கள் தொடர்ந்து பேரரசுக்கு தோல்வியை கொடுத்தன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை இழந்தார் பேரரசு. இந்த நிலையில் தற்சமயம் படங்களின் இசை வெளியீட்டு விழா போன்றவற்றில் கலந்துக்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சீக்கிரத்தில் திரைக்கு வரவிருக்கும் ஹாட்ஸ்பாட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை பார்க்க சென்றிருந்தார் பேரரசு. இந்த படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், கலையரசன் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து பேசிய பேரரசு பேசும்போது இந்த திரைப்படம் குழந்தைகள் வாழ்க்கையை பேசுகிறது. ஒரு குழந்தையை குழந்தையாக யாரும் இருக்க விடுவதில்லை.

ஒரு குழந்தை 4 வயதிலேயே 40 வயது ஆளுக்கு இருக்கும் அறிவோடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இதுவும் ஒரு வகையில் சிசுக்கொலைதான். அந்தந்த வயதில் அதற்கு தகுந்த நிலையில் அவர்கள் இருக்க பெற்றோர்கள் விடுவதில்லை. எனவே அவர்களுக்கான படம்தான் இந்த ஹாட்ஸ்பாட். ஆனால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்திருப்பது வருத்தமளிக்கிறது என்கிறார் பேரரசு.

To Top