பிரபல நடிகர் ராமதாஸ் மரணம்! –  திரைத்துறை அஞ்சலி!

தமிழ் சினிமாவில் எழுத்தாளராகவும் அதே சமயம் நடிகராகவும் இருந்தவர் ஈ. ராமதாஸ். 1999 இல் வெளிவந்த சங்கமம் படத்தில் திரைக்கதையில் இவர் பணிப்புரிந்துள்ளார்.

வெகு காலங்களாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு முதல் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். குக்கூ, விசாரணை, விக்ரம் வேதா, மாரி 2 போன்ற படங்களில் நடித்தார்.

விசாரணை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராமதாஸ். இந்நிலையில் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் ராமதாஸ்.

அவரது உடல் தற்சமயம் கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி அளவில் உடலை தகனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரை நட்சத்திரங்கள் மற்றும் பொது மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Refresh