ரீமேக் ஆக இருக்கும் முந்தானை முடிச்சு திரைப்படம்! – யாரெல்லாம் நடிக்கிறாங்க!

தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்கியராஜ் இயக்கிய இந்த திரைப்படம் அப்பொழுதே கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

முழுக்க முழுக்க நகைச்சுவையான திரைக்கதையை கொண்ட திரைப்படம் முந்தானை முடிச்சு. தற்சமயம் இந்த படத்தை திரும்ப எடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் கதாநாயகனாக சசிக்குமார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். கதையின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய காலத்திற்கு ஏற்றாற் போல படத்தை மாற்றி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. எனவே அடுத்த வருடம் இந்த படத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Refresh