பல்லு பிடுங்காமல் பாம்பை விட்ட படக்குழு! – ரஜினி படத்தில் நடந்த சம்பவம்!

அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்கள் வந்த காலத்தில் எல்லாம் ரஜினி குழந்தைகளுக்கான கதாநாயகனாக இருந்தார். குழந்தைகள் பலருக்கும் ரஜினி திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். இதனால் ரஜினி படங்களில் குழந்தைகளை கவரும் வகையில் காட்சிகளை வைப்பது வழக்கம்.

அண்ணாமலை திரைப்படத்திலும் கூட அப்படியான ஒரு காட்சி அமைந்தது. பால் குடுக்க வரும் ரஜினி பாம்பை விரட்டுவது போன்ற காட்சி அது. அதில் ரஜினியின் மீது ஏறி அந்த பாம்பு செல்லும். மிகவும் நகைச்சுவையான காட்சி.  அந்த காட்சி படமாக்கப்பட்டதை பற்றி படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரஜினி படத்திற்கு என்று பாம்பு கொண்டு வர வாடிக்கையான ஒரு ஆள் உண்டு. அவர்தான் அன்றும் பாம்பை கொண்டு வந்துள்ளார். அப்போதே சுரேஷ் கிருஷ்ணா கேட்டுள்ளார். பாம்பை நடிக்க வைப்பது பாதுக்காப்பனதுதானா? ரஜினி சார்க்கு எந்த ஆபத்தும் ஏற்படாதே? என கேட்டுள்ளார். பாம்பு வைத்திருப்பவரும் “வாய் தைச்சிதான் சார் இருக்கு. பிரச்சனை இல்லை” என நம்பகத்தன்மையாக கூறியுள்ளார்.

அதன் பிறகு பாம்பு காட்சி படமாக்கப்பட்டது. படமாக்கப்பட்ட பிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது. அதாவது வாய் தைத்த பாம்பானது இன்னொரு கூடையில் இருந்துள்ளது. வாய் தைக்காத விஷ பாம்பைதான் நடிப்பதற்கு இறக்கியுள்ளனர்.

ஒருவேளை தவறுதலாக அது ரஜினிகாந்தை கடித்திருந்தால் பெரும் அசம்பாவிதத்தை சந்தித்திருப்போம் என கூறுகிறார் சுரேஷ் கிருஷ்ணா.

Refresh