தளபதி 67க்கும் விக்ரமிற்கும் கனெக்ட் இருக்கு! – தரமான அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்!

தற்சமயம் விஜய் நடிப்பில் வெளியாகி அதிரடியான ஹிட் கொடுத்து வருகிறது வாரிசு திரைப்படம். இதுவரை 250 கோடிக்கு ஓடியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பரில் துவங்கிய தளபதி 67 திரைப்படத்தில் படப்பிடிப்பு தற்சமயம் வேகமெடுத்து சென்றுக்கொண்டுள்ளது.

குறித்த நேரத்தில் படத்தை எடுத்து முடிப்பவர் லோகேஷ் கனகராஜ் என்பதால் சீக்கிரமே அவரிடத்தில் அப்டேட்டை எதிர்ப்பார்க்கலாம். இந்த படத்தில் 50 வயது கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார்.

விஜய்க்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் தளபதி 67 குறித்து நடிகர் ஃபகத் ஃபாசில் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். ஒரு பேட்டியில் தளபதி 67இல் நீங்கள் நடிக்கிறீர்களா? என ஃபகத் ஃபாசிலிடம் கேட்கப்பட்டது. அப்போது ஃபகத் ஃபாசில் தளபதி 67 திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு திரைப்படங்களில் ஒன்றாகதான் வரவிருக்கிறது. எனவே எனக்கும் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

இதன் மூலம் விக்ரம் படத்துடன் விஜய்யின் தளபதி 67 கனெக்ட் ஆகும் என்கிற தகவல் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் கமல், விஜய் காம்போ எனும்போது அது பெரிய காம்போவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் காமியோ ரோலில் வருகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Refresh