Tamil Cinema News
அந்த விஷயத்துல விஜய்யை விட நாந்தான் பெரிய ஆளு… 2கே கிட்ஸ்க்கு பிரபுதேவா கொடுத்த பதில்.. அவரை பத்தி தெரியாம கேட்டுட்டீங்களேப்பா?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இங்கு நடனம் என்று கூறினாலே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நடிகர் பிரபுதேவாதான் டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து வந்த பிரபுதேவா அதற்குப் பிறகுதான் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதனாலயே தமிழ் சினிமாவில் நடனம் தொடர்பான திரைப்படங்கள் எடுக்கப்படுகிறது என்றாலே அதில் பிரபு தேவாதான் கதாநாயகனாக இருப்பார். பிரபுதேவாவிற்கு பிறகு நிறைய நடன கலைஞர்கள் வந்து விட்டார்கள் என்றாலும் கூட பிரபுதேவாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
ஏனெனில் மைக்கேல் ஜாக்சனின் நடனங்களில் துவங்கி அனைத்து வகை நடனங்களையும் பிரபுதேவா ஆட கூடியவர். இவ்வளவு வயதான பிறகும் கூட இப்பொழுதும் பிரபுதேவா இளமை காலங்களில் எப்படி ஆடிக் கொண்டிருந்தார்.
பிரபுதேவாவிடம் கேட்ட கேள்வி:
சமீபத்தில் அவர் நடித்த லட்சுமி, ஏ.பி.சி.டி போன்ற திரைப்படங்கள் எல்லாமே நடனத்தை அடிப்படையாக கொண்ட படங்களாகதான் இருந்தன. அவை அனைத்திலுமே பிரபுதேவாதான் முக்கிய கதாபாத்திரமாக இருந்தார். ஆனால் பிரபுதேவா நடிக்கும் மற்ற திரைப்படங்கள் அவருக்கு அவ்வளமாக கை கொடுப்பதில்லை.
பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியைதான் கண்டு வருகின்றனர். ஒரு நடிகராக பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட ஒரு நடன கலைஞராக டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் முக்கிய நபராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பிரபு தேவா பங்கேற்ற பொழுது அங்கு இருந்த கல்லூரி மாணவர் பிரபு தேவாவிடம் ஒரு கேள்வி கேட்டார். இப்போது இருக்கும் விஜய் அஜித் மாதிரியான நடிகர்களில் யாராவது ஒருவரை பார்த்து இவர் நம்முடைய துறைக்கு வந்திருந்தால் நடனத்தில் நம்மை மிஞ்சி இருப்பாரே என்று நீங்கள் நினைத்ததுண்டா என்று மாணவர் அவரிடம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த பிரபுதேவா அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார் இதனை பார்த்த பிரபு தேவாவின் ரசிகர்கள் பழைய பிரபுதேவா யார் என்று இப்பொழுது இருக்கும் 2கே கிட்ஸ் களுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் இந்த கேள்வியை பிரபுதேவாவிடம் கேட்டிருக்க மாட்டார்கள் என்று கூறி வருகின்றனர்.
