Connect with us

இளைஞர்களின் சீரழிவுக்கு வழி வகுக்கும் பிரதீப் ரங்கநாதன்.. விமர்சனத்தை கிளப்பும் திரைத்துறையினர்.!

Tamil Cinema News

இளைஞர்களின் சீரழிவுக்கு வழி வகுக்கும் பிரதீப் ரங்கநாதன்.. விமர்சனத்தை கிளப்பும் திரைத்துறையினர்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களின் மூலமாகவே அதிக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். சொல்லப்போனால் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வந்த படம் கோமாளி. அதனை தவிர்த்து பார்த்தால் அவர் கதாநாயகனாக நடித்த ஒரே திரைப்படம் லவ் டுடே திரைப்படம்தான்.

ஆக பிரதீப் ரங்கநாதன் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் ஒரு திரைப்படத்தில் நடித்தும் உள்ளார். இப்படி இருக்க பிரதீப் ரங்கநாதனுக்கு முன்பிருந்தே சினிமாவில் இருக்கும் மணிகண்டன், கவின் மாதிரியான நடிகர்களை விடவும் பிரதீப் அதிக சம்பளம் வாங்குகிறார்.

அதற்கு முக்கிய காரணம் லவ் டுடே திரைப்படம்தான். லவ் டுடே திரைப்படம் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 60 கோடி வரை வசூல் சாதனை செய்தது. மணிகண்டன் அல்லது கவின் நடித்த எந்த படமும் இன்னமும் இந்த வெற்றியை கொடுக்கவில்லை.

அடுத்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டிராகன் என்கிற திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். ஏற்கனவே லவ் டுடே திரைப்படம் இப்போது உள்ள 2 கே தலைமுறையினருக்கு பிடித்ததாக இருந்தாலும் கருத்தியல் ரீதியாக அந்த படம் அபத்தமான விஷயங்களை பேசியிருந்தது.

தொடர்ந்து ஆண் செய்யும் எதுவும் பெரிய தவறு இல்லை பெண்கள் செய்வதுதான் தவறு என்பதாக ஒரு பக்கம் மட்டுமே சார்ந்து இருந்தது அந்த படத்தின் கதை. இதனால் ஒரு பக்கம் பலருமே அந்த படத்தை விமர்சித்தே வந்தனர்.

அதே சமயம் இப்போது வெளியாக இருக்கும் டிராகன் திரைப்படமும் வழக்கமான கல்லூரி கதை அமைப்பில் அமைந்துள்ளது. கல்லூரிக்கு சென்று படிப்பதை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் இளைஞன் கடைசியில் தன் வாழ்வில் எப்படி சாதித்தான் என்பதுதான் அந்த கதை அம்சம்.

மீசைய முறுக்கு, டான் என பல படங்கள் ஏற்கனவே இதே கதை அமைப்பில் வந்துவிட்டன. ஆனால் இந்த படங்களில் சில பிரச்சனைகள் உண்டு. உண்மையில் கல்லூரி காலங்கள்தான் தொழில் சார்ந்த விஷயங்களை படிப்பதற்கான காலக்கட்டங்களாக இருக்கின்றன.

ஹாலிவுட் திரைப்படமான ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் கூட கதாநாயகன் கல்லூரி படிக்கும்போது படிப்பில் அதிக நாட்டமாக இருப்பதாகவும் பல ஆய்வுகளை செய்வதாகவும்தான் கதை இருக்கும்.

ஆனால் தொடர்ந்து கல்லூரி என்னமோ ஜாலி செய்வதற்கான இடமாக திரைப்படங்களில் காட்டப்படுகிறது. மேலும் அப்படி இருப்பவர்களும் கூட வாழ்க்கையில் பெரிய உயரத்தை தொட முடியும் என படங்கள் காட்டுவது இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்தும் என கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

 

Author By

RK Rajkumar

To Top