Connect with us

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் ஃப்ளாப்பு… ஆரம்பிக்கும் முன்பே எண்ட் கார்டா…

pradeep ranganathan

News

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் ஃப்ளாப்பு… ஆரம்பிக்கும் முன்பே எண்ட் கார்டா…

Social Media Bar

Pradeep Ranganathan : லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். ஏனெனில் என்ன இருந்தாலும் இயக்குனரை விட கதாநாயகனுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று நினைக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

அதற்கு தகுந்தார் போல அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. மக்களும் அவரை கதாநாயகனாக ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

pradeep-ranganathan
pradeep-ranganathan

இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதலில் இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் இந்த படம் குறித்து சினிமாவில் உள்ள பெரும் புள்ளிகள் கூறும் பொழுது இந்த திரைப்படம் தோல்வியை காண்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். ஏனெனில் அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் படமாக்கப்பட இருக்கிறது கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது.

ஆனால் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்படி ஒரு மார்க்கெட் தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூற வேண்டும். இதற்கு முன்பு எடுத்த லவ் டுடே திரைப்படம் குறைந்த பட்ஜெட் படம் என்பதால் அது அவருக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. அதேபோல இந்த திரைப்படத்தையும் சின்ன நட்சத்திரங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.

To Top