Latest News
நம்பிக்கையை விட்டுராதீங்க வீட்டுக்கு வந்திடலாம்னு சொன்னேன்.. விஜயகாந்தின் இறுதி நொடிகள் குறித்து பகிர்ந்த பிரேமலதா!..
சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விஜயகாந்தின் இறப்பு தமிழ்நாட்டில் பெரும் அலையை ஏற்படுத்தியது. ஏனெனில் வாழும் காலம் முழுக்க ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து நன்மைகளை செய்து வந்தார் விஜயகாந்த். எனவே விஜயகாந்தின் இழப்பு என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்குமே பெரும் மன கவலையாக அமைந்தது.
ஏற்கனவே நுரையீரல் தொற்று தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் பிறகு சரியாகி வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. பிறகு மீண்டும் அவரது உடல்நிலை பிரச்சனையாகவே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இந்த முறை கை மீறி சென்றது.
இந்த நிலையில் இதுக்குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது “கேப்டனை 26 ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இருந்தோம். ஆனால் 8 எனக்கு பிடிக்காத எண் ஆகும். 26 இன் கூட்டுத்தொகை எட்டு என வருவதால் நான் சற்று யோசித்தேன். ஆனால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டி இருந்ததால் மருத்துவர்கள் அழைத்து வர சொன்னார்கள்.
2014 ஆம் ஆண்டு முதலே விஜயகாந்திற்கு மருத்துவம் பார்க்க உலகில் உள்ள பல மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன். எனவே அவருக்கு மோசமாக எதுவும் நிகழாது என்றே அவரை 26 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்த்தேன். அப்போதுதான் அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினார்கள். எனவே நாங்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கினோம்.
இந்த நிலையில் 28 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அவர் கண்களை முழுதாக விரித்தார். அப்படியெல்லாம் கேப்டன் செய்ததே கிடையாது. பிறகுதான் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது என தெரிந்தது. நான் அப்போதும் அவரது கையை பிடித்து நிச்சயம் நாம் வீட்டிற்கு சென்றுவிடலாம் தைரியமாக இருங்கள் என்றே கூறினேன்.
அந்த சமயத்தில் வந்த மருத்துவர்கள் இந்த முறை காப்பாற்றுவது கடினம் உங்கள் உறவினர்களுக்கு சொல்லிவிடுங்கள் என கூறிவிட்டனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் கேப்டன் உயிர் பிரிந்துவிட்டது என முழு தகவலையும் அளித்துள்ளார் பிரேமலதா.
பலரையும் கண் கலங்க வைக்கும் விஷயமாக இது அமைந்துள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்