Tamil Cinema News
ரஜினி படம் பத்து பைசாவுக்கு பெறாது.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபலம்..!
பல்வேறு காரணங்களால் ஒரு திரைப்படம் என்பது ஓடாமல் போவது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் திரையரங்குகள் கிடைக்காமல் போவது அது இல்லாமல் சினிமாவில் கொண்டிருக்கும் உள் அரசியல் போன்றவை படங்களை ஓட விடாமல் செய்கின்றன.
ஜெய் பீம் திரைப்படம் வெளியான பொழுது குறிப்பிட்ட சாதியினரால் அந்த திரைப்படம் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் சூர்யாவிற்கும் நிறைய எச்சரிக்கைகள் எல்லாம் வந்தன.
இதுகுறித்து சமீபத்தில் பிஸ்மி பேசும் பொழுது அரசியல் காரணங்களால் இந்த மாதிரியான திரைப்படங்கள் ஏன் ஓடாமல் போகிறது என்பது குறித்து விளக்கி வந்தார்.
அப்பொழுது பாபா திரைப்படமும் இதே மாதிரியான அரசியல் காரணங்களால் தான் ஓடவில்லை என்ற ஒரு பேச்சு இருந்ததே என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிஸ்மி பாபா திரைப்படம் பைசா காசுக்கு பிரயோஜனம் இல்லாத ஒரு திரைப்படம்.
அது அரசியல் காரணங்கள் காரணங்களால் ஓடாமல் போகவில்லை அந்த படம் சரியில்லை அதனால்தான் அந்த படம் போகவில்லை. ஒரு வேலை ரஜினி நடித்த அண்ணாமலை மாதிரியான திரைப்படங்களுக்கு இதே பிரச்சினை வந்தாலும் அந்த படங்கள் ஓடி தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் பிஸ்மி.
