Connect with us

ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திக்கிட்டு திரியுறீங்க!.. அஜித்தை நேரடியாக கேட்ட தயாரிப்பாளர்!..

Cinema History

ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திக்கிட்டு திரியுறீங்க!.. அஜித்தை நேரடியாக கேட்ட தயாரிப்பாளர்!..

Social Media Bar

அதிக சம்பளம் வாங்கும் டாப் தமிழ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்கள் ஹிட் கொடுக்கும் என்பதால் தமிழில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக அஜித் இருந்து வருகிறார். அதே சமயம மக்கள் பலருக்கும் நன்மைகள் செய்ய கூடியவர் அஜித் என்று அவருக்கு பெயர் உண்டு.

ஆனால் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அதற்கு எதிரான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அஜித் தன்னிடம் பணம் பெற்றுவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளராக இருந்த காலக்கட்டத்தில் அஜித் அவருடைய தயாரிப்பில் படம் நடிப்பதற்காக 28 லட்சம் ரூபாயை வாங்கியிருக்கிறார்.

ajith
ajith

அப்போது அஜித்தின் சம்பளம் அவ்வளவுதான் இருந்துள்ளது. ஆனால் அதற்கு பிறகு அஜித் இவருடைய தயாரிப்பில் படமே நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பலமுறை மாணிக்கம் நாராயணன் பணம் கேட்டும் அஜித் கொடுக்கவே இல்லை.

இதனால் கடுப்பான மாணிக்கம் நாராயணன் சினிமா ஆட்களை இதற்காக நாடியுள்ளார். ஆனால் அவர்களிடம் மாணிக்கம் நாராயணனிடம் நான் காசே வாங்கவில்லை என்று கூறிவிட்டார் அஜித். இதுக்குறித்து பேசும் மாணிக்க நாராயணன் நான் இப்போ கஷ்டத்தில் இருக்கிறேன்.

ஊருக்கே நல்லவன்னு வேஷம் போடுறான். ஆனால் எனக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுக்க மாட்டேங்குறான். இப்போ கோடிகளில் சம்பாதிச்சும் என் காசை கொடுக்க முடியல. என்று அஜித்தை திட்டி பதிவிட்டுள்ளார் மாணிக்கம் நாராயணன்.

To Top