Latest News
தயாரிப்பாளரிடம் சிக்கிய மர்ம ஆல்பம்..! ராதிகா செய்த வேலை.. திடுக் உண்மையை வெளியிட்ட பிரபலம்..!
சமீபகாலமாக கேரளாவில் நடந்து வரும் பாலியல் பிரச்சனை குறித்த விஷயங்கள் அதிகமாக வெளியில் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் நடிகைகளும் இது குறித்து பேச துவங்கியிருக்கின்றனர்.
முக்கியமாக தமிழ் நடிகைகள் மலையாளத்தில் அவர்களுக்கு நடந்த பாலியல் பிரச்சனைகள் குறித்த விஷயங்களை வெளியில் கொண்டு வர துவங்கி இருக்கின்றனர். இதனால் தமிழில் இந்த மாதிரியான பிரச்சனைகள் நடக்கவில்லையா? என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகிறது.
இதற்கு நடுவே நடிகை ராதிகாவும் கூட 40 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடித்த பொழுது கேரவனில் சி.சி.டி.வி கேமராவின் மூலமாக நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
ராதிகா செய்த வேலை
அதனால்தான் நான் அதிகம் மலையாள படங்களில் நடிக்கவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த காந்தராஜ் கூறும் பொழுது அப்போதைய காலகட்டத்தில் முதலில் கேரவனே கிடையாது மிக தாமதமாக தான் தமிழ் சினிமாவிற்கு கேரவன் வந்தது.
அதற்கு பிறகுதான் மலையாள சினிமாவிற்கு கேரவன் வந்தது. அப்படி இருக்கும்பொழுது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டே முதலில் பொய். அதை தாண்டி அப்பொழுது நடிகர் சங்க தலைவராக இருந்தவர் அவரது கணவர் சரத்குமார்தான்.
பிரபலம் கூறிய திடுக்கிடும் தகவல்
அப்படி இருக்கும் பொழுது அவரிடம் சென்று கூறி அப்பொழுது அதற்கு தீர்வு கண்டு இருக்கலாமே ஏன் அதை ராதிகா செய்யவில்லை. இத்தனை வருடம் காத்திருந்து எதற்கு இப்பொழுது வந்து கூறுகிறார். எல்லாம் ஒரு விளம்பரத்திற்காக தான் அவர் செய்கிறார் என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறும் பொழுது நடிகைகள் எப்படி வாய்ப்பு வாங்குகிறார்கள் என்றெல்லாம் உங்களுக்கு தெரியாது. நடிகைகளின் அம்மாக்கள் இதற்கென்று ஒரு ஆல்பத்தை தயார் செய்து தயாரிப்பாளரிடம் கொண்டு காட்டுவார்கள். அது எவ்வளவு ஆபாசமாக இருக்கும் தெரியுமா அந்த ஆல்பத்தை எல்லாம் ஒரு நடிகையாவது வெளியில் எடுத்து காட்ட சொல்லுங்கள் உண்மை தெரியும் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார்.