Cinema History
Rajinikanth : ரெண்டு வாரத்துக்கு படத்தை கழுவி ஊத்துவாங்க கண்டுக்காதீங்க!.. பிரபுவுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்!..
Actor Rajinikanth in chandramukhi: திரைத்துறையில் ரஜினிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்த ஒரு சம்பவம் என்றால் அது பாபா படத்தின் தோல்விதான். 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியே தயாரித்து உருவான திரைப்படம்தான் பாபா.
பாபா திரைப்படத்தை பொறுத்தவரை அது மாபெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பினார் ரஜினிகாந்த். ஆனால் அவர் நம்பிக்கைக்கு மாறாக அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து சில வருடங்கள் திரைப்படங்களே நடிக்காமல் இருந்தார் ரஜினிகாந்த்.
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அவர் நடித்த திரைப்படம்தான் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகன் என்றாலும் அதில் ரஜினிகாந்த் மட்டுமே முக்கிய கதாபாத்திரம் கிடையாது. ரஜினி இல்லாமல் பலர் அதில் முக்கிய கதாபாத்திரங்களாக இருந்தனர்.
இந்த நிலையில் அந்த படத்தை பார்த்த ஏ.வி.எம் சரவணன் ஏன் ரஜினிகாந்த் இப்படியான படத்தில் நடித்தார் என யோசித்தார். இந்த படத்தை தயாரித்த பிரபுவிற்கும் இந்த படம் குறித்து ஐயம் இருந்தது. இந்த நிலையில் பிரபுவிடம் பேசிய ரஜினிகாந்த் முதல் இரண்டு வாரங்கள் இந்த திரைப்படம் அதிக விமர்சனத்துக்குள்ளாகும். ஆனால் அதன் பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என கூறினார்.
அதே போலவே ஆரம்பத்தில் பேசுபொருளானாலும் படம் அதற்கு பிறகு பெரும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ஒருவருடம் ஓடி சாதனை படைத்தது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்