Connect with us

அது என் குருவோட படம் நஷ்டமாக கூடாது!.. கை காசை போட்டு வேலை பார்த்த ரஜினி!.

rajini

Cinema History

அது என் குருவோட படம் நஷ்டமாக கூடாது!.. கை காசை போட்டு வேலை பார்த்த ரஜினி!.

Social Media Bar

சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை தமிழில் அதிகமாக வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இதனாலேயே இப்போதும் கூட அவரது திரைப்படங்களுக்கு இருக்கும் மதிப்பு குறையவே இல்லை.

விஜய் அஜித் என அடுத்த தலைமுறை நடிகர்கள் சினிமாவிற்கு வந்துவிட்டாலும் கூட அவர்களால் கூட ரஜினிகாந்த் கொடுக்கும் வசூல் சாதனையை கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நடிப்பில் தனித்துவமான ஸ்டைலை கொண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஒதுக்கியுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் மிகவும் ஆசைப்பட்டு நடித்த திரைப்படம் பாபா. பாபா படத்தை ரஜினியே தயாரித்து நடித்தார். இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ஆனால் படம் வெளியான பிறகு அது பெரிதாக வெற்றியடையவில்லை.

baba
baba

இதனால் படத்தை வாங்கிய திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் இழப்பீடு கொடுக்க முன்வந்தார் ரஜினி. பொதுவாக படம் ஓடவில்லை என்றால் வாங்கிய தொகையில் இருந்து 25 சதவீதம் இழப்பீடாக வழங்குவார்கள்.

ஆனால் பாபா படத்தை பொறுத்தவரை, “இது என் குருவுக்காக எடுக்கப்பட்ட படம், இதனால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்பட கூடாது என கூறிய ரஜினிகாந்த் அனைவருக்கும் முழு தொகையும் கொடுத்துள்ளார். இது இல்லாமல் விநியோகஸ்தர்களுக்கு கொஞ்சம் லாப தொகையையும் கொடுத்துள்ளார் ரஜினி.

To Top