கூலி திரைப்படத்தில் வரும் அடுத்த பாடல்.. வெளிவந்த அப்டேட்..!
நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ரஜினி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் திரைப்பட ரசிகர்களுமே இந்த படம் குறித்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் என்பதால் கமர்ஷியலாக சிறப்பான படமாக இருக்கும். தமிழில் ஆக்ஷன் திரைப்படங்களில் எல்லா காலங்களிலும் மாஸ் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ரஜினி.
அவரை வைத்து லோகேஷ் இயக்குகிறார் என்பதே பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து ஒவ்வொரு முறை அப்டேட் வெளியாகும்போது அது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாகதான் அமைந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக சிக்குட்டு என்கிற பாடல் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகிறது. அதில் ரஜினி க்ளிம்ஸ் விடீயொவில் வந்தது போலவே அனிரூத் வாட்ச்களை கொண்டு செய்யப்பட்ட செயினை எடுத்துக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் வருகிற ஜுன் 25 இந்த பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.