Connect with us

25 வருடமாக நான் எந்த திறப்பு விழாவுக்கும் போனதில்ல!.. காரணம் இதுதான்!.. மனம் திறந்த ரஜினிகாந்த்!.

rajinikanth young

News

25 வருடமாக நான் எந்த திறப்பு விழாவுக்கும் போனதில்ல!.. காரணம் இதுதான்!.. மனம் திறந்த ரஜினிகாந்த்!.

Social Media Bar

Rajinikanth: தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தை பொருத்தவரை அதிகபட்சமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் இருக்கும். ரஜினிகாந்த் இசை நிகழ்ச்சி விருது வழங்கும் விழா போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக சென்று விடுவார்.

அதே போல ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்கு செல்லும்போதும் பத்திரிகையாளர்களை சந்தித்து அந்த படம் குறித்து அப்டேட் கொடுப்பார். அந்த அளவிற்கு ரஜினிகாந்த் பெரும்பாலும் மக்களிடம் தொடர்பில் தான் இருப்பார் என்றாலும் கூட அதிகபட்சம் கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டார்.

இந்த நிலையில் தற்சமயம் காவேரி மருத்துவமனையில் நடந்த விழா ஒன்றிற்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கு பேசிய ரஜினிகாந்த் கூறும் பொழுது இதே விஷயத்தை கூறிருந்தார். 25 வருடங்களாக நான் எந்த ஒரு திறப்பு விழாவிற்கும் சென்றது கிடையாது.

rajinikanth
rajinikanth

அதற்கு என்ன காரணம் என்றால் ஏதாவது ஒரு திறப்பு விழாவிற்கு நான் செல்லும் பொழுது அந்த நிறுவனத்தில் நானும் ஒரு பங்குதாரர் என்று புரளியை கிளப்பி விடுகிறார்கள். தொடர்ந்து நான் ஒவ்வொரு முறை இந்த மாதிரி கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும்பொழுது இந்த புரளிகள் வரத் துவங்கியிருந்தன.

அதனால் 25 வருடங்களாக நான் எந்த திறப்பு விழாவிற்கும் செல்வது கிடையாது. இருந்தாலும் இந்த காவிரி மருத்துவமனை விழாவிற்கு ஏன் வந்தேன் என்றால் மருத்துவர்கள் மீது எனக்கு அதிக மரியாதை உண்டு என்னை பலமுறை காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள். அதனால் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக இந்த விழாவில் நான் கலந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்

To Top