News
அந்த பேச்சு பேசிட்டு எப்படி இப்போ நடிக்க வந்தீங்க!. சத்யராஜை வெளுத்து வாங்கும் ரஜினி ரசிகர்கள்..!
தமிழில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் சத்யராஜ். இந்த நிலையில் தற்சமயம் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அதற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சத்யராஜ்.
இந்த நிலையில் அவர் ரஜினிகாந்த் லோகேஷ் காம்போவில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் விழாவில் பேசியிருந்தார்.

இதனையடுத்து இந்த விஷயம்தான் தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது. ஒரு காலக்கட்டத்தில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் குறித்து அதிக விமர்சனம் செய்துள்ளார் சத்யராஜ். அதே போல அரசியலை வைத்து பிசினஸ் செய்ய கூடாது என்றெல்லாம் பேசியிருந்தார்.
சத்யராஜுக்கு எதிர்ப்பு:
அதே போல ஒரு பேட்டியில் பேசும்போது தன்னை விட மூத்தவரான ரஜினிக்கு அப்பாவாக நடிக்கும் கொடுமை எல்லாம் நடந்தது என கூறியிருக்கிறார் சத்யராஜ்.
இப்படி தொடர்ந்து ரஜினிகாந்திற்கு எதிராக பேசிவிட்டு இப்போது பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்தவுடன் நடிக்க வருவது என்ன நியாயம் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள். சத்யராஜை எதற்கு கூலி படத்தில் போட்டீர்கள் இதனால் நாங்கள் அந்த படத்தை புறக்கணிப்போம் என கூறுகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
