Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ரஜினி கொடுத்த வேட்டையன் அப்டேட், தரமான சம்பவம் காத்துட்டு இருக்கு போலயே

ரஜினி கொடுத்த வேட்டையன் அப்டேட், தரமான சம்பவம் காத்துட்டு இருக்கு போலயே

by Arun
February 12, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த “லால் சலாம்” திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கின்றனர்.

விளையாட்டில் மத வெறி கலக்க கூடாது என்ற கருத்தாக்கத்தில் வெளியான இத்திரைப்படம் மதநல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

“லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது.

இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சான், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “வேட்டையன்” திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாம். இன்னும் 20 சதவிகிதமே மீதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் இருந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இத்திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“வேட்டையன்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் இத்திரைப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார். அன்பறிவு மாஸ்டர்கள் சண்டை காட்சிகளை வடிவமைக்க உள்ளனர்.

“வேட்டையன்” திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என தெரிய வருகிறது. மேலும் இத்திரைப்படம் வருகிற 2025 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தை குறித்த தகவல்கள் “வேட்டையன்” திரைப்படம் வெளியான பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும்.

Tags: Lokesh Kanagarajrajinikanthtamil cinemavettaiyanதமிழ் சினிமாரஜினிகாந்த்வேட்டையன்
Previous Post

எனக்கு செஞ்சதுக்குதான் நல்லா அனுபவிச்சார் வடிவேலு!.. நடிகை ஆர்த்திக்கு நடந்த துரோகம்!.

Next Post

எனக்கும் அரசியல் ஆசை இருக்கு – ஓப்பனாக போட்டுடைத்த வாணி போஜன், இப்பவே இப்படியா?

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
எனக்கும் அரசியல் ஆசை இருக்கு – ஓப்பனாக போட்டுடைத்த வாணி போஜன், இப்பவே இப்படியா?

எனக்கும் அரசியல் ஆசை இருக்கு – ஓப்பனாக போட்டுடைத்த வாணி போஜன், இப்பவே இப்படியா?

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved