நான் சொல்ற மாதிரி நடிங்க, பெரிய ஆளா வருவீங்க – அப்பவே சத்யராஜ்க்கு உதவிய ரஜினி

கோலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி வரும் நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் ஆரம்ப காலம் முதல் இப்போது வரை ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்து வரும் ஒரு கதாநாயகனாக ரஜினி இருக்கிறார்.

சத்யராஜ் சினிமாவிற்கு வந்த புதிதில் அதிகப்பட்சம் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு இவருக்கு வில்லனாக வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வெகு நாட்களுக்கு பிறகே அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனால் ஆரம்ப காலங்களில் எந்த ஒரு சிறு கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் நடிப்பதற்கு சத்யராஜ் முயற்சி செய்து வந்தார். ரஜினி நடித்து 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்று முகம். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ்க்கு சின்ன வேடம் ஒன்று கிடைத்ததாம்.

அப்போது சத்யராஜின் நடிப்பை பார்த்த ரஜினி அவரிடம் பேசினாராம். “உங்களது முகம் ஒரு வித்தியாசமான முகம். எனவே நீங்கள் உங்களுக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கி கொண்டால் தமிழ் சினிமாவில் பெரிய ஆளாக வரலாம்” என கூறியுள்ளார்.

ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் நான் எப்படி சார் எதாவது புது விதமாக செய்வது? அப்படி செய்தாலும் அதை இயக்குனர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என சத்யராஜ் கேட்டுள்ளார்.

நீங்கள் புதிதாக செய்யுங்கள். அது சுற்றி இருப்பவர்களுக்கு பிடித்திருந்து கை தட்டி விட்டாலே இயக்குனரும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என புத்திமதி கூறியுள்ளார் ரஜினி.

அதன் பிறகு தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்ட சத்யராஜ் பின்னர் ரஜினிக்கு சமமான கதாபாத்திரத்தில் மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் நடித்தார். இந்த நிகழ்வை நடிகர் சத்யராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Refresh