இது நடந்தா நானும் ரஜினியும் சேர்ந்து படம் பண்ணுவோம்.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்..!

கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். பல காலங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருவரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆரம்ப காலகட்டங்களில் கமல் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல இருவருமே ஒருவருக்கு ஒருவர் போட்டி நடிகராக மாறிய காரணத்தினால் அதற்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவே இல்லை.

இப்போது வரை ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் இப்போது வரை அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

kamalhaasan
kamalhaasan
Social Media Bar

இது குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ரஜினிகாந்தும் நானும் இப்பொழுதும் நண்பர்களாக தான் இருக்கிறோம். நிறைய முறை ரஜினிகாந்த் என்னிடம் நாம் இருவரும் சேர்ந்து படம் நடிக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

அப்படி கேட்கும் போதெல்லாம் அந்த படத்தை ஒன்று நான் தயாரிக்க வேண்டும் இல்லையென்றால் அவர் தயாரிக்க வேண்டும் என்பதுதான் பேச்சாகவே இருந்தது. இப்பொழுது தான் நான் அதை சாதித்து காட்டி உள்ளேன்.

தக்லைஃப் திரைப்படத்தில் நானும் மணிரத்தினமும் மட்டும்தான் அந்த படத்தை தயாரித்து இருக்கிறோம். அந்த மாதிரியான ஒரு சூழல் அமையும் போது ரஜினிகாந்தும் நானும் சேர்ந்து படம் நடிக்க முடியும் என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.