Connect with us

அடுத்தும் சமூக நீதி இயக்குனருடன் கூட்டணி போடும் ரஜினிகாந்த்.. ரஜினியின் புது ஃபார்முலா!.

rajinikanth1

News

அடுத்தும் சமூக நீதி இயக்குனருடன் கூட்டணி போடும் ரஜினிகாந்த்.. ரஜினியின் புது ஃபார்முலா!.

Social Media Bar

Rajinikanth : அரசியல் வருகிறேன் என கூறிய காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் தொடர்ந்து சமூக நீதிக்கு ஆதரவான திரைப்படங்களில் நடித்து வருவதை பார்க்க முடிந்தது.

அப்படியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக இரு படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். கபாலி, காலா என அந்த இரு திரைப்படங்களுமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தன. அதற்கு பிறகு திரும்ப அந்த மாதிரியான திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை.

பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் என வரிசையாக கமர்ஷியல் திரைப்படங்களாக நடித்தார். இவற்றில் சில படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தாலும் கபாலி காலா ஆகிய திரைப்படங்கள் கொடுத்த பாராட்டையும் பெயரையும் இந்த படங்கள் பெற்று தரவில்லை.

rajinikanth vettaiyan
rajinikanth vettaiyan

எனவே ஒரு கமர்ஷியல் திரைப்படம், ஒரு சமூக பொறுப்புள்ள படம் என நடிக்க முடிவெடுத்துள்ளார் ரஜினிகாந்த். அந்த வகையில் தற்சமயம் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கு பிறகு மீண்டும் சமூக நீதி திரைப்படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் திரைப்படம் ரஜினியின் இறுதி திரைப்படம் என கூறி வந்த நிலையில் அந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளது இந்த செய்தி.

To Top